செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் எப்போதும் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிவது வழக்கம். இந்நிலையில் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி என்ற மூதாட்டி தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று மூதாட்டியை கடித்தது.
தொடர்ந்து அதே கிராமத்தில் தெருவில் நடந்து சென்ற 14 வயது சிறுவன், மூன்று பெண்கள் உட்பட ஏழுபேரை கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெறிநாய் கடித்துக்குதறியது. வெறி நாய் கடிபட்ட அனைவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.