தமிழகத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திமுக அரசை கண்டித்து சொத்து வரி உயர்வு பால் விலை, விலைவாசி உயர்வு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் எம் தனபால் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பேரணியாக முக்கிய பஜார் வீதியில் சென்று எம்ஜிஆர் சிலை அருகே கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி செயலாளர் தினேஷ்குமார் மாவட்ட மீனவரணி செயலாளர் கவிஞர் கலியபெருமாள் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ் அலி ஒன்றிய செயலாளர் ரைஸ்மில் செல்வம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.