தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்யை வரவேற்க தயாராகும் வரவேற்பு பதாகைகள். "எங்கள் குல சாமியே என்றும், நாளைய முதல்வரே வருக, வருக" என கோவளம் கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வரை வரவேற்பு பதாகைகள் வைக்கும் பணி தீவிரம். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை வரவேற்க கோவளம் முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வரவேற்பு பதாகைகள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.