செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை மற்றும் காரிய மேடை திறப்பு விழா - பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் 23 மற்றும் 25 வார்டுகளைச் சார்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 12 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலை கடை மற்றும் அண்ணா நகர் பகுதியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 5. 80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட காரிய மேடை திறப்பு விழச் நகர கழக செயலாளர் நரேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சி பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் ஆகியோர்கள் பங்கேற்று நியாய விலை கடையினை திறந்து வைத்து விற்பனையை துவங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து காரிய மேடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்பணித்தனர்.