திருக்கோவிலூர் - Tirukoilur

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

திருக்கோவிலுாரில் மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் உயிரிழந்தார். திருக்கோவிலுாரை சேர்ந்தவர் வேலு மகன் கமலேஷ், 19; இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கலை கல்லுாரியில் பி. எஸ்சி. , கணினி அறிவியல் முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை 4. 30 மணியளவில் வீட்டில் குளித்து கொண்டிருந்த கமலேஷின் கை அருகில் உள்ள மின்ஒயரின் மீது பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி கமலேஷ் கீழே விழுந்தார். உடன் அவரது குடும்பத்தினர் கமலேஷினை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கமலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


விழுப்புரம்
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
Sep 13, 2024, 02:09 IST/விழுப்புரம்
விழுப்புரம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

Sep 13, 2024, 02:09 IST
விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி எதிரில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். கூட்டு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விஜயரங்கம், மண்டல செயலாளர் தண்டாயுதபாணி, கிளைத்தலைவர் வெங்கடேசன், இணைச்செயலாளர் ஜோதிப்பிரியா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பழைய ஓய்வூதியம், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை திரும்பபெறக் கோருதல், புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிக்கு கால நீட்டிப்பு வழங்குதல், பேராசிரியர் பணிமேம்பாடு வழங்குதல், முனைவர் பட்ட ஊக்க ஊதியம் வழங்குதல், ஆசிரியர் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்துதல், கல்லுாரி ஆசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தக் கோருதல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் மாத ஊதியம் வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை பொருளாளர் அசோகன் நன்றி கூறினார்.