விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்தியா சிலம்பரசன், ராஜன்பாபு, கண்ணகி சுரேஷ், சண்முகசுந்தர்ராஜ் உள்ளிட்டோர் நேற்று (செப்.12) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: - கடந்த 5 மாதங்களாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் தெருவிளக்கு பணிகளை மேற்கொண்ட வகையில் செலவின் தொகைக்கு ஒத்துழைப்பு தராமல் மறுத்து வருகிறார். இதனால் ஊராட்சியின் அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய செயல்களால் 5 மாதமாக ஊராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கிப்போயுள்ளது. இதுபற்றி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.