கள்ளக்குறிச்சி - Kallakurichi

அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம்

அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்கள் மற்றும் சில துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் பயன்பாட்டில் இருப்பதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விருத்தாசலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட சில துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. தினமும் காலை 8: 00 மணி முதல் இரவு 8: 00 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை உட்பட) செயல்படும் சேவை மையத்தில், புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்ட ஆதார் சார்ந்த அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி