கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், வி. மாமந்தூர் ஊராட்சி, விமாமந்தூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் புதிதாக வீடு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளி பார்வதி, க/பெ. குழந்தைவேல் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த் நேற்று (செப்.13) நேரில் பார்வையிட்டு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் பயன்பாடு குறித்து பயனாளியிடம் கேட்டறிந்தார்.