கள்ளக்குறிச்சி - Kallakurichi

கள்ளக்குறிச்சி: நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

சு. ஒகையூர் காட்டுகொட்டாய் பகுதியில் நாய்கள் கடித்து 3 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. கள்ளக்குறிச்சி தாலுகா, சு. ஒகையூர் காட்டுகொட்டாயை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் பஞ்சன், 50; கூலித்தொழிலாளி. இவர் பட்டி அமைத்து, 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் (அக்.,15) இரவு ஆடுகளை பட்டியில் வழக்கம்போல் கட்டி விட்டு பஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு இரத்த காயங்களுடன் 3 ஆடுகள் இறந்திருப்பதை கண்டு பஞ்சன் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, இறந்த ஆடுகளின் உடல்களை பார்த்த போது நாய்கள் கடித்து குதறியது தெரிந்தது. சு. ஒகையூர் கிராமத்தில் சுற்றித்திரியும் நாய்கள் இரவு நேரங்களில் கால்நடைகளை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடப்பதாகவும், நாய்களை பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி