கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி அருள்மணி, 25; இருவருக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லை. இதனால் விருத்தாசலம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அருள்மணி சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து சிதம்பரம் பஸ்சில் சென்ற அருள்மணி திடீரென மாயமாகினார். உடன் அவரது கணவன் பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி விசாரித்தும் அருள்மணி பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
பாலமுருகன் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.