பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

66பார்த்தது
பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
சின்னசேலம் பகுதி புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலை பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்.13) பகல் 10: 30 மணியளவில் நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (என். எச். ஏ. ஐ. , ) நிறுவனத்தின் பிராஜக்ட் மேலாளர் சதீஷ், சின்னசேலம் அண்ணா நகர் பகுதியில் சாலை பணிகளை பார்வையிட சென்றார்.

அப்போது அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பைபாஸ் சாலையிலிருந்து மூங்கில்பாடி செல்லும் கிராம சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதை தொடர்ந்து சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, பேச்சு வார்த்தை நடத்தி தற்சமயம் இணைப்பு சாலையை மண் சாலையாக போட்டுத் தருவதாக உறுதி கூறியதை தொடர்ந்து மக்கள் 10: 40 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you