சின்னசேலம் பகுதியில் உள்ள கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உற்சவருக்கு 25 வகையான சிறப்பு அபிேஷகம் செய்து, கிருஷ்ணன் அவதாரத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. மகா தீபாரதனையை ஜெயக்குமார் பட்டாச்சாரியர் செய்து வைத்தார். விழாவில் பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் உற்சவருக்கு பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வைத்து தங்க தேரில் வலம் வரசெய்து உரியடி நடந்தது. அதேபோல் சின்னசேலம் அடுத்த தென்பொன் பரப்பியில் மகாவிஷ்ணுவுக்கு சர்வ அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமணிவித்து மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தனர்.