மொடக்குறிச்சி - Modakurichi

ஈரோடு முனியப்பன் கோவில் திருப்பணி தொடக்கம்

ஈரோடு முனியப்பன் கோவில் திருப்பணி தொடக்கம்

ஈரோடு கோட்டை பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், முனியப்பன் சுவாமி கோவில் உள்ளது. குறிப்பாக, இக்கோவிலின் கருவறை இடிந்த நிலையில், அங்கிருந்த பழமையான முனியப்பன் சிலை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முனியப்பன் கோவிலை இடித்து அகற்றி விட்டு, புதிய கோவிலை கட்ட வேண்டும அதன் அடிப்படையில், சமீபத்தில் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி, கோவிலில் உடனடியாக திருப்பணி மேற்கொள்ள, கோவில் செயல் அலுவலர் ஜெயலதாவுக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும், கோவிலை இடித்து விட்டு, புதுப்பித்து கட்டுவதற்காக துறைரீதியிலான மண்டல மற்றும் மாநில அளவிலான திருப்பணி வல்லுநர்குழுவிடமும் ஒப்புதல் பெற்றப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் திருப்பணி ஒரு சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதனையொட்டி, முனியப்பன் சுவாமி கோவிலில் திருப்பணி செய்ய ஏதுவாக நன்கொடை செலுத்த விரும்பும் உபயதாரர்கள் வரவேற்கப்படுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் சார்பில், வைக்கப்பட்டுள்ள பேனரில், கோவிலுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள், கீழ்க்கண்ட கீயூஆர் கோடுயை ஸ்கேன் செய்து நன்கொடை செலுத்தலாம். மேலும், துறையின் இணையதள https: hrce. tn. gov. in/hrcehome/intex. php–வாயிலாக நன்கொடை செலுத்தலாம். எந்தவொரு தனிநபரிடமோ அல்லது குழுவிடமோ நன்கொடை கொடுத்து ஏமாற வேண்டாம்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా