நிறுத்தி வைக்கப்பட்ட10 மோட்டார் சைக்கிள்கள்தீ வைத்துஎரிப்பு

56பார்த்தது
ஈரோடு அடுத்த சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு இந்தக் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு காரணமாக ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோவில் நிர்வாகி குப்புசாமி தலைமையில் நிர்வாகிகள் நேற்று ராமேஸ்வரம் கிளம்பி சென்றனர். இதற்காக தங்களது இருசக்கர வாகனங்களை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென அந்த 10 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி