தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

71பார்த்தது
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற ஆலயத்தின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூலவராக உள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் ஸ்வர்ண லிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. இந்த கோயில் மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி தினம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவ ஆலயத்திற்கு ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில் பக்தர்கள் தங்களது திருக்கரங்களால் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிஜி தலைமையில் பைரவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. அதேபோல் 39 அடி உயரம் கொண்ட காலபைரவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு தினத்தையொட்டி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ததால் வரச்சலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி