ஈரோடு மாவட்டத்தில் 382 மில்லி மீட்டர் மழை பதிவு
காற்றழுத்த தாழ்வு காரணமாக ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று(அக்.15) காலை முதலே பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்த மழை நள்ளிரவு தாண்டி அதிகாலை வரையிலும் சில இடங்களில் நீடித்தது. குறிப்பாக நம்பியூர் மக்கள் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 56 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 8 மணி முதல் இன்று(அக்.16) காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: - ஈரோடு-13, மொடக்குறிச்சி-11, கொடுமுடி-24, பெருந்துறை-17, சென்னிமலை-27, பவானி-15. 20, கவுந்தப்பாடி-20, அம்மாபேட்டை-8, வறட்டுப்பள்ளம்-32, கோபி-30. 20, எலந்த குட்டைமேடு-34. 40, கொடிவேரி அணை-19. 20, குண்டேரிப்பள்ளம்-16, நம்பியூர்-56, சத்தியமங்கலம்-23, பவானிசாகர் அணை-20. 60, தாளவாடி-16.