இமெயில் மூலம் ஈரோடு சிபிஎஸ்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

83பார்த்தது
ஈரோட்டில் ஏற்கனவே இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இமெயில் மூலம் சி. பி. எஸ். சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபுரத்தான் பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பள்ளி இ -மெயில் ஐ. டி. க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு அவசர அவசரமாக விடுமுறை அறிவித்து இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்களும் பதறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து தங்களது குழந்தைகளை வேக வேகமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.
பெருந்துறை டி. எஸ். பி கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் உடனடியாக பள்ளிக்கு வந்து வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர். பள்ளி கேட் மூடப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி