மூளை வளர்ச்சி குன்றிய பேத்தியுடன் பாட்டி தற்கொலை

68பார்த்தது
வெள்ளோட்டில் மூளை வளர்ச்சி குன்றிய பேத்தியுடன் பாட்டி தற்கொலை செய்து கொண்டீர் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுண்டிச்சிபாளையம் பகுதியில் மணிவேல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு விசாகன் மற்றும் விகாசினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. விகாசினி(3)மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் மணிவேலின் தாய் தமிழரசி(65) மிகவும் மன வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணிவேல் மனைவி மற்றும் மகனுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டில் விகாசினி மற்றும் பாட்டி தமிழரசி இல்லாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதில் அருகில் உள்ள கிணற்றில் தமிழரசி மற்றும் விகாசினியின் உடல் மிதந்துள்ளது‌. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டு ஐஆர்டிடிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து வெள்ளோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி