மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்., 27) விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் பிரம்மாண்மாக நடக்கிறது. மாநாட்டுக்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று மாலை கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். 50,000 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் சுதந்திரப்போராட்ட வீரர்கள், தலைவர்களின் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.