ஈரோட்டில் மேட்டூர் சாலையில், வடக்கு போக்குவரத்து போலீசார், நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மருத்துவமனையை நோக்கி, எலக்ட்ரிக்கல் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் இருந்ததால், பிரீத்திங் அனலைசரை கொண்டு ஊத செய்தனர். அதில் அவர் ஊதவே, போதையில் இருப்பதை கருவி உறுதி செய்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்த போது, தன் பெயர் மதிவாணன், 45, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற் றவர் என கூறினார்.
குடிபோதையில் வாகனம் இயக் கியது குறித்து கேள்வி எழுப்பியதும், போலீசாரையும், தமிழக அரசையும் திட்டினார். பலரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமலும், போதையிலும் வாகனம் இயக்கி செல் கின்றனர். என்னை மட்டும் பிடித்தது ஏன்? எனக்கூறி போலீசாருடன் வாக் குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சாலையில் வந்த வாகனங்களை கையை காட்டி நிறுத்தி, தகாத வார்த்தையில் பேசினார். இதனால் அப்ப குதியில் கூட்டம் கூடியது. வடக்கு போக்குவரத்து போலீசார் ஈரோடு டவுன், அரசு மருத்துவமனை போலீ சாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித் தனர். இந்நிலையில் தான் குடிபோ தையில் இருந்ததை, மதிவாணன் ஒப்பு கொண்டார். அவர் மீது போதையில் வாகனம் இயக்கியதாக வழக்குப்ப திந்த போலீசார், அதற்குரிய ரசீதை அளித்தனர். பிறகு பைக்கை பறிமுதல் செய்தனர். இதனால் சாலையில் பரப ரப்பு ஏற்பட்டது.