ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசு என்று ஓபிஎஸ் ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு காரில் ஏறிச் சென்றார்.