நடுத்தர மக்கள் மாதம் ஒரு பெரிய தொகையை மருந்து வாங்குவதற்கு செலவிட வேண்டி இருக்கிறது. இதை குறைக்கும் வகையில் தற்போது முதல்வர் மருந்தகங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த மருந்தகங்களில் 20% முதல் 90% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் மெட்பார்மின் மாத்திரை மத்திய அரசு மருத்தகங்களில் ரூ.30-க்கு கிடைக்கும் நிலையில், முதல்வர் மருந்தகங்களில் ரூ.11-க்கு கிடைக்கும்.