இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளார். தூபாயில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகமது ஷமி 5 வைடுகள் உட்பட மொத்தம் 11 பந்துகளை வீசினார். இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட முதல் ஓவராகும்.