இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெக் பீஸ்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, வி.டி.வி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் 'லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லரை நடிகர் விஷால் நாளை மாலை 4:30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.