செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக பாராட்டு கிடைத்தது. தெலுங்கில் இப்படம் "யுகானிக்கு ஒக்கடு" என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மார்ச் 14ம் தேதி ரீ-ரிலீஸாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.