

தர்மபுரி: வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை சரிவு
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பூண்டு வரத்து சரிந்து காணப்பட்டதை எடுத்து ஒரு கிலோ பூண்டு சராசரியாக 300 ரூபாய் முதல் அதிகபட்சமாக 420 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை அடைந்த நிலையில் தற்போது வட மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பூண்டின் விலை படிப்படியாக குறைந்து இன்று பிப்ரவரி 10 தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரத்து தொடர்ந்து சீராக இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.