தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மூன்றாம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி நடத்துவதற்கு தடங்கம் மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஸ் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவம், கால்நடை பராமரிப்பு துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்பு, மின்சாரம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் வழிகாட்டு நடைமுறைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். வாடிவாசலில் காளை வரும் வழி, காளைகள் வெளியேறும் இடம், வீரர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர்.