தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதி சேர்ந்த 11 வயது சிறுமி அந்த பகுதியில் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது காரிமங்கலம் அருகே பெருசா கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுரேஷ் அந்த சிறுமி தனது வீட்டில் கலைக்கு சென்று யாரும் இல்லாதபோது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதனை சிறுமி பெற்றோரிடம் கூறினர் பெற்றோரர் இது தொடர்பாக குழந்தைகள் நல உதவி மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி அவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தினர் இதனை தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு சுரேஷ் காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது விசாரணை முடிவில் சுரேஷ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவஞானம் தீர்ப்பு வழங்கினார்.