
தருமபுரி: ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட சமூகநல துறையின் சார்பில் தருமபுரி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடர்பாக ஏப்ரல் மாத மாதந்திர ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இஆப. தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ₹1000 வீதம் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தற்போது மார்ச் மாதம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 14,758 பயனாளிகளும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 11,507 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். மேலும், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காமல் இருப்பவர்கள் காலதாமதம் ஏற்படுத்தாமல் இணைத்து தொடரவும் இத்திட்டத்தில் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார்.