தர்மபுரி: மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கோடை மழை

85பார்த்தது
தமிழகத்தில் இன்று தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது இந்த நிலையில் இன்று ஏப்ரல் 03 காலை முதலே தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது கோடை காலம் தொடங்கிய சில நாட்களிலேயே தற்போது கோடை மழை பொழிய தொடங்கியுள்ளது அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி