தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் நுழைவுவாயில் பகுதியில் நேற்றுமுன் தினம் போளையம்பள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் காந்தி என்ற ஒப்பந்த ஊழியர் காவலாளியாக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பான பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சின்னசாமி பிரசவ வார்டுக்குள் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது ராகுல்காந்தி பிரசவ வார்டுக்குள் பெண்கள் மட்டுமே இருப்பதால் அந்த வார்டுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சின்னசாமி, ராகுல்காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நகர காவலர்கள் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது பற்றி ராகுல்காந்தி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை கைது செய்தனர்.