தர்மபுரி: கரும்பு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

75பார்த்தது
தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டுரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத் தின் கீழ் பயன்பெற கரும்பு பயிரை காப்பீடு செய்யாத விவ சாயிகள் வருகிற 31-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) ஒரு ஏக்கருக்கு ரூ. 2, 600 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது பதிவு எண், விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், இ-அடங்கல் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகை செலுத்திய பின்பு அதற்கான ரசீதையும் பொது. சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோல் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரசீதை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் ஏற் படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட கரும்பு சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி