தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எச். தொட்டம்பட்டியில் அமைந்துள்ளது பொன். ஐஸ்வர்யம் என்ற தனியார் தொண்டு நிறுவனம். இந்த தொண்டு நிறுவனம் சார்பில் தொடர்ந்து அரூர் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சமூக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மை மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பொன். பலராமன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.