தர்மபுரி: திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

68பார்த்தது
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி விளைவிக்கின்ற ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் முன் இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மணி கழக இளம் பேச்சாளர் பெர்தி வினித் மற்றும் கழக செய்தி தொடர்பு செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய சூர்யா கிருஷ்ணமூர்த்தி இந்தி மொழியை திணித்தால் தமிழ் மொழி காலி ஆகிவிடும் என்பது திமுக சொல்வது உண்மை எப்படி என்றால் பஞ்சாபில்இந்தியை ஒன்றிய அரசு திணித்தால் பஞ்சாபி மொழி போய்விட்டது. அதேபோல் ஒடிசா பேஜ்புரி,
பீகார். பீகார் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியை திணித்ததால் அவர்களது தாய்மொழி போய்விட்டது. அதனால் அந்த மாநிலங்களுக்கு ஏற்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் வருவதற்கான முயற்சிகளை மத்திய ஒன்றிய அரசு எடுத்து வருகிறது தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி