
அரூர்: சிறுமியை கடத்தி குழந்தை திருமணம் செய்தவர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 15 வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று சேலம் புதிய பஸ் நிலை யத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டதாக சைல்டுலைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று விசா ரித்தனர். அப்போது அரூர் அருகே கர்த்தனூர் கிராமத்தை சேர்ந்த மாறன் என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் சிறுமியின் பெற்றோர் தேடுவதை அறிந்து சேலத்திற்கு வந்திருப்பதும் தெரியவந்தது. அங்கு சிறுமியை மாறன் விட்டு விட்டு தலைமறைவாகி இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்ததன் பேரில் கோபிநாதம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி குழந்தை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கும் மாறனை தேடி வருகின்றனர்.