தர்மபுரி: நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

74பார்த்தது
தமிழகத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. பல்வேறு மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் திறக்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவுறுத்தலின் பேரில் இன்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியானது இன்று இண்டூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள் உள்ளிட்டவற்ற வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணித்தலைவர் டி. ஆர். அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி