தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

68பார்த்தது
அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கிராம சபைக் கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் கலந்துகொண்டு, சிறப்பித்தனர். 

இக்கிராம சபைக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப்பட்டதோடு, அதியமான்கோட்டை கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய பெருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் கலந்துகொண்டு, பேசும்போது தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 251 ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெறுகின்றது. 

இந்த கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தண்ணீர் விலை மதிப்பில்லா ஒரு பொருளாகும். நீடித்து நிலைத்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திடும் வகையில் அதனைப் போற்றி பாதுகாத்திட வேண்டும். மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you