தர்மபுரி: பாசனத்திற்கு நீர் வேண்டி விவசாயிகள் கோரிக்கை மனு

51பார்த்தது
தொப்பையாறு அணை பாசன விவசாயிகள் விவசாயிகள் என்ற ஆட்சியிடம் வழங்கிய மனுவில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணையிலிருந்து, விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் கடந்த, 3 அன்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், தொப்பையாறு அணை இடது புற பாசன கல்வாய், 27 கி. மீ. , நீளம் கொண்டது. வெள்ளார், காடையாம்பட்டி கிராமங்களுக்கு மட்டும் கடந்த, 20 நாட்கள் பாசனத்திற்கு நீரை திறந்து விட்டனர். கடைமடையில் உள்ள விவசாயிகளுக்கு நீர் வரவில்லை. இதில், விரைவில் பாசனத்திற்கு நீர் வரும் எனக் கூறியதால், கதவுகள் இல்லாத இடங்களில் மண், கல் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கி, இரவு பகல் பாராமல் பணிகளை செய்து முடித்தோம்.

ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில், கிளை கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. கிளைக் கால்வாய்கள் பொதுப்பணித்துறை பதிவேட்டில் இல்லை. எனவே, பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டுமென, எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாசனத்திற்கு நீர் தருவதாக கூறி ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் கிளை கால்வாய்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு நீர் திறக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி