தர்மபுரி: நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

58பார்த்தது
தர்மபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டை பகுதியில் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் வரவேற்புரையாக ஆசிரியர் சௌந்தரபாண்டியன், தலைமை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பட்டதாரி ஆசிரியர் மாலதி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் ஜீவா நாசர், கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சையத் வாஹித், தர்மபுரி ஒன்பதாவது வார்டு நகரமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், 13வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜெகன், ஆறாவது வார்டு நகரமன்ற உறுப்பினர் முன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்கள் தர்மபுரி திமுக நகரக்கழகச் செயலாளர் நாட்டான் மாது, அக்ஷயா முருகன், சரவணன், கிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் பூங்கொடி, வனிதா, சௌந்தரபாண்டியன், கணேஷ், விஜிதா, லோகேஸ்வரி, அம்பிகா, மல்லிகா, மகாலட்சுமி ஆகியோர் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி