கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பழந்தெருவில் எழுந்தருளியுள்ள கும்பேஸ்வரர் கோவிலில் நேற்று அக்.16 புரட்டாசி மாத சதூர்த்தியை முன்னிட்டு நடராஜர் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் புதுத்தெரு விநாயகர் கோயில், விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் உள்ள நடராஜர் சுவாமிக்கும்சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.