கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையம் வெளியே கால்வாய் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.