கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் காவல் துறையினர் நேற்று (செப்.20) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு ஏற்ப சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் மேல்புவனகிரி ஏ. எஸ். ஆர். நகரைச் சேர்ந்த ரவி மற்றும் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெரு கனகராஜ் என்பதும், கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து 15 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.