கடலூர் அருகே தம்பதி மனு அளிப்பு

58பார்த்தது
கடலூர் அருகே தம்பதி மனு அளிப்பு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வல்லம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவருடைய மனைவி மேனகா (வயது 43). இவர்கள் 2 பேரும் நேற்று(செப்.19) கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கள் கூறியிருப்பதாவது:

'நாங்கள் எங்களுக்குரிய பூர்வீக இடத்தில் வசித்து வருகிறோம் இந்நிலையில் சம்பவத்தன்று உறவினர் திருமண நிகழ்ச் சிக்கு சென்று விட்டு 4 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தோம். அப்போது சொத்து தகராறில் 5 பேர் சேர்ந்து எங்கள் வீட் டுக்குள் புகுந்து, பொருட்களை அடித்து உடைத்து விட்டனர். மேலும் வீட்டில் இருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டனர்.

இதை கேட்ட எங்களை ஆபாசமாக பேசி தாக்கி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இதுபற்றி பரங்கிப் பேட்டை போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சொத்தை அபகரித்து எங்களை வீட்டை விட்டு விரட்டியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'. இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி