கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 19 ஆம் தேதி பரங்கிப்பேட்டை பகுதியில் 100. 04 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் கடை வியாபாரிகள் அவதிப்பட்டனர். இது மட்டும் இல்லாமல் முக்கிய சாலைகள் மற்றும் கிராம புற சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.