வெறும் பாலைக் குடிப்பதற்கு பதிலாக அதில் ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடிப்பது நல்லது என முன்னோர்கள் சொன்னார்கள். மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் தோல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும். தொண்டை கரகரப்பாகும் பிரச்னைக்கு உடனடி நிவாரணம் தரும்.