தொண்டாமுத்தூர் - Thondamuthur

பேரூர்: ட்ரெக்கிங் பட்டியலில் இருந்து நீக்க கோரி மனு

பேரூர்: ட்ரெக்கிங் பட்டியலில் இருந்து நீக்க கோரி மனு

கோவையில் உள்ள வெள்ளிங்கிரி மலையை தமிழ்நாடு வனத்துறையின் டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பக்தர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். வெள்ளியங்கிரி ஆண்டவர் காவடிக்குழு என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளாக பக்தர்கள் ஒன்றிணைந்து கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு புனித ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புனித யாத்திரையில் பங்கேற்று, 7வது மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வனத்துறை வெளியிட்ட டிரெக்கிங் தமிழ்நாடு திட்டத்தின் பட்டியலில் வெள்ளிங்கிரி மலை இடம்பெற்றிருப்பது பக்தர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெள்ளிங்கிரி மலையின் புனிதத் தன்மையை பாதிக்கும் என்று பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெள்ளியங்கிரி மலையானது ஆன்மீக புனிதத் தளம் என்றும், அது மலையேற்றத்துக்கான சுற்றுலாத் தளம் அல்ல என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிரெக்கிங் திட்டப் பட்டியலில் இருந்து வெள்ளிங்கிரி மலையை நீக்க வேண்டும் என்றும், வெள்ளிங்கிரியில் டிரெக்கிங் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా