தொண்டாமுத்தூர் பகுதிகளில் திடீர் கன மழை!

78பார்த்தது
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இந்தாண்டு, கோடை உழவில், தக்காளி மற்றும் சின்னவெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், இன்று(செப்.11) காலை முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி