பேரூர்: மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

78பார்த்தது
பேரூர்: மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பயிற்சி அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் முருங்கை மற்றும் காளானிலிருந்து பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். முருங்கையிலிருந்து முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், சூப் மிக்ஸ் போன்றவை தயாரிக்க கற்றுத் தரப்படும்.

அதேபோல், காளானிலிருந்து காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிரியாணி மிக்ஸ் தயாரிப்பதற்கான பயிற்சியும், காளான் பிழிதல் தொழில்நுட்பமும் வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாயில் எண் 7 வழியாக வரலாம். மேலும் விவரங்களுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரை 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி