ரத்தினபுரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை ரத்தினபுரி காமாட்சி நகரை சேர்ந்தவர் சேட்டு மகன் அரவிந்தன்(18). 10வது வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று (நவம்பர் 9) திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.