தொண்டாமுத்தூர் - Thondamuthur

கோவை: சிறையில் கஞ்சா பறிமுதல்

கோவை: சிறையில் கஞ்சா பறிமுதல்

கோவை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைபேசி, புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சிறை கைதிகள் இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. நிலையில் மத்திய சிறை வளாகத்தில் ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்பொழுது 29 ஆவது பிளாக்கில் 10வது அறை, எட்டாவது பிளாக்கில் 38 ஆவது அறை, ஆகியவைகளிலிருந்து எட்டு கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக போலீசாருடன் அந்த அறையில் இருந்த கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகமணி (31), குளித்தலையைச் சேர்ந்த ஜீவா (37), திருப்பூரைச் சேர்ந்த சூர்யா (27), ஆகிய மூன்று பேர் மீதும் ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా